ஞாயிறு, 14 டிசம்பர், 2025

1134567890 GO TO END

2J - தகவல் பெறும் உரிமை - விளக்கம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பின்வரும் உரிமைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.
    அரசு அலுவலகங்களின்,
  1. வேலைகள், ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தல்
  2. குறிப்பெடுத்தல்,
  3. பொருள்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரி பெறல்,
  4. ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறல்.

GO TO TOP

6 - விண்ணப்ப மனு அளித்தல்

இந்த சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற

தனிப்பட்ட படிவம் கிடையாது. வெள்ளைத் தாள் போதுமானது.

விண்ணப்ப கட்டணம் ரூ.10/- மட்டும்.(court fee, D.D, SBI bank treasury challan) காண்க

தகவல் பெற விரும்பும் மனுதாரர், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்ப மனுவை அனுப்ப வேண்டும்.

இதற்காக அனைத்து அரசு அலுவலகத்திலும் பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவைப்படும் தகவலுக்கான காரணத்தை கூறவேண்டிய அவசயமில்லை.

6(2) - உதவி தேவைப்படும்(மாற்றுத்திறனாளி/முதியவர்) மனுதாரருக்கு அலுவலக உதவியாளர் மூலம்(மனு எழுத) உதவி வழங்க வேண்டும்.

6(3) - பெறப்பட்ட மனு தனது அலுவலகம் சாராதது எனில், அதை உரிய அலுவலகத்துக்கு பொதுத் தகவல் அலுவலர் 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதை கடிதம் மூலம் மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எனவே, தேவைப்படும் தகவல் எந்த அலுவலகம் சார்ந்தது என தெரியாத பட்சத்தில் எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் மனுவை அனுப்ப முடியும். (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புவது சிறப்பு.)

GO TO TOP

7 - மனு பரிசீலனை

    7(1) - மனுவை பெற்ற பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் பின்வரும் மூன்றில் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்
  • தகவல் வழங்குவது
  • கூடுதல் கட்டணம் செலுத்தக்கோருவது
  • மனுவை நிராகரிப்பது.

கோரப்படும் தகவல் மனுதாரரின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் தொடர்புடையது எனில் 48 மணி நேரத்தில் தகவலை வழங்க வேண்டும்

7(2) - 30 நாளில் மனுவுக்கு பதில் தராவிட்டால் பொதுத் தகவல் அலுவலர், அம்மனுவை நிராகரித்ததாக பொருள்படும்.

7(3) - தகவலை வழங்க கூடுதல் கட்டணம் தேவைப்பட்டால், அதை மனுதாரருக்கு எழுத்து மூலம் பொதுத் தகவல் அலுவலர் தெரிவிக்க வேண்டும்

கூடுதல் கட்டணம் நியாயமற்றது / அதிகப்படியானது என மனுதாரர் கருதினால், அதை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம்.

7(7) - கோரப்படும் தகவல் மூன்றாவது நபர் சார்ந்தது எனில் அவரது கருத்தை கேட்டறிந்து, அதை பரிசீலிக்க(ஏற்பது / நிராகரிப்பது) வேண்டும்.

    7(8) - பொதுத் தகவல் அலுவலர் மனுவை நிராகரிக்கும் பட்சத்தில், மூன்று விவரங்களை மனுதாரருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

  1. மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் (இனம் வாரியாக)
  2. முதல் மேல்முறையீட்டுக்கான கால அளவு
  3. முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் தொடர்பு விவரம்

GO TO TOP

முறையீடுகள்

முதல் மேல்முறையீடு

    பின்வரும் காரணங்களுக்காக முதல் மேல்முறையீடு செய்யலாம்.
  • மனுவிற்கு பொதுத் தகவல் அலுவலர் 30 நாளில் பதில் / தகவல் வழங்கவில்லை
  • சரியான / முழுமையான தகவல் வழங்கப்படவில்லை
  • மனு நியாயமற்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டுள்ளது
முதல் மேல்முறையீட்டுக்கான கால அளவு

மனு அனுப்பியது முதல் 60 நாட்களுக்குள்

அல்லது

பொதுத் தகவல் அலுவலரின் பதில் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள்.

இதற்காக அனைத்து அரசு அலுவலகத்திலும மேல்முறையீட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேல்முறையீட்டு அலுவலர் சரியெனக் கருதும் பட்சத்தில் கால அளவு கடந்தும் மேல்முறையீட்டை அனுமதிக்கலாம் / பரிசீலிக்கலாம்.

மூன்றாவது நபரும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது.

இரண்டாவது மேல்முறையீடு

    பின்வரும் காரணங்களுக்காக இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.
  • முதல் மேல்முறையீட்டு அலுவலர் 45 நாட்களுக்குள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை
  • முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் / முடிவு திருப்தியளிக்கவில்லை
இரண்டாவது மேல்முறையீட்டுக்கான கால அளவு : முதல் மேல் முறையீடு செய்ததது முதல் 90 நாட்களுக்குள்
அல்லது
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் பெற்றதிலிருந்து 60 நாட்களுக்குள்

இரண்டாவது மேல்முறையீட்டை விசாரிக்கும் அமைப்பாக மத்திய/ மாநில தகவல் ஆணையம் இருக்கும்.

இரண்டாவது மேல்முறையீட்டில் சம்பந்தப்பட்டு இருப்பின், விசாரணையின்போது மூன்றாவது நபருக்கும் தனது கருத்தை கூற / எதிர் வாதம் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்

தனது முடிவு சரியானது என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு பொது தகவல் அலுவலரையே சேரும்.

    தகவல் ஆணையம் பின்வரும் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும்
  • மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க உத்தரவிடுவது .
  • மனுதாரரை ஆய்வுக்கு அனுமதிப்பது
  • காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு உரிய இழப்பீட்டை பொது அதிகார அமைப்பிடமிருந்து பெற்றுத்தருவது,
  • பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல் முறையீட்டு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது.

    பின்வரும் காரணங்களுக்காக பொது தகவல் அலுவலரை தகவல் ஆணையம் தண்டிக்கும் அதிகாரம் படைத்தது.
  • சரியான காரணமின்றி தகவல் வழங்க மறுத்தது
  • சரியான / முழுமையான தகவலை வழங்காதது
  • உரிய காலத்தில் தகவல் வழங்காதது
  • விண்ணப்ப மனுவை பெற மறுத்தது
  • விண்ணப்ப மனுவுக்கு பதில் அளிக்காதது.

Chapter 5

This chapter explains ba bla bla

explains ba bla bla

Chapter 21

This chapter explains ba bla bla

Chapter 22

This chapter explains ba bla bla

This chapter explains ba bla bla

GO TO TOP